Tuesday, October 15, 2013

எந்தன் பச்சைக்கிளிக்கொரு வாழ்த்து!


வாழ்கை ஒருவித அலட்சியத்துடனேயே கழிந்து கொண்டிருந்த நாட்கள் அவை....! எனக்கும் சரி என் கணவருக்கும் சரி சிரிப்பும் கும்மாளமும் ,சட்டை சட்டையாய் வாங்கிக் குவித்தலும், இனிமையான பயணங்களும், கசினோக்களில் போட்டி போட்டு ரஷ்யன் ரோலர்களுமாய் எந்தவொரு பயமுமில்லாமல் வாழ்கை போய்க் கொண்டிருந்த நாட்களின் திசை மாற்றுக் காரணியாய் வந்த அதிசயம் என் அஷ்வத்தாமா!!



எல்லாரும் ஏன் இந்தப் பெயர் என்றோ, யாருமே வைக்காத பெயர் என்றோ, அமெரிக்காவில் வெள்ளைக்காரன்கள் இந்தப் பெயரை என்னமாதிரியெல்லாம் உச்சரித்து குதறப்போறான்கள் என்றோ தங்கள் அபிப்பிராயங்களைக் கொட்டிக் கொண்டிருந்த வேளை என் தம்பி பாலா ஒரு படி மேலே போய் இருந்து பாருங்கோ...பிள்ளை வளர்ந்து இந்தப் பெயர் வேண்டாமென்று தனக்கு பெயர் மாற்றி வைக்காட்டில் நான் மொட்டை போடுறன் என்றே சவால் விடுமளவுக்கு நான் என் பிள்ளைக்கு “அஷ்வத்தாமா”  என்று தான் பெயர் வைப்பேன் என்று சொன்ன போது தாக்கம் கிளம்பியது. அப்படி ஒரு ஈடுபாடு எனக்கு அந்தப் பெயரில். ஆனால் ஸ்கான் என்ற கட்டத்துக்கு போகும் முன்பே என்ன ஆண்பிள்ளை என்று நீராக கற்பனை செய்கிறீர்?? பெண் பிறந்தால்...? என்ற ஒரு நிகழ்தகவை எல்லாரும் வைத்த போது அது என்னவோ என் மனம் மட்டும் இல்லை ஆண் தான் என்று நம்பியது. என் கணவருக்கு பெண் பிள்ளை தான் விருப்பம். பாவம் அப்பாவின் விருப்பத்தை இரண்டு பிள்ளைகளும் அலட்சியம் செய்துவிட்டார்கள். :):)

எப்படியோ..அஷ்வத்தாமா என் வாழ்கையின் போக்கையே திசை மாற்றிய தேவ தூதன்! கையில் ஒரு பூங்கொத்தாக முதலில் அவரை தூக்கிய அந்த கணத்தின் பாதிப்பை இப்போது இதை எழுதும் போது கூட  அனுபவிக்கிறேன். பிரசவம் என்பதில் சுகப்பிரசவம் என்ற சொல்லே பொய்! வாழ்கையின் மிகப்பெரிய  வலியை எனக்கு தெரியப்படுத்தியவர் என் மகன். :) என்னை  உடலளவிலும் , மனதளவிலும் இரு கூறாக்கிய பெருமை அவருக்கு இருக்கிறது.  
 
தான் பிறந்தபோது எனக்களித்த சந்தோசத்தையும் உவகையையும் ஒரு துளியேனும் குறையவிடாமல் இன்றளவும் தக்க வைத்திருக்கும் மாயம் தெரிந்த என் மகனுக்கு இன்று பிறந்தநாள்...!

எத்தனையோ வார்த்தைகளை புதிது புதிதாக தேடுவேன் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து எழுதும் போது...ஆனால் எனக்கென்று இலாவகமாக எழுதக் கிடைத்த வாழ்த்து  என்றும் வாழும் இனிய தமிழ் போல் வாழ்வில் எல்லா நலனும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே!! அதையே தான் மகனே உங்களுக்கும் இந்த நாளில் நான் சொல்வது,..!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் செல்லம்!



அன்புடன்
அம்மா.






https://www.youtube.com/watch?v=jLgJ42Uy8qs

6 comments:

  1. செல்லத்திற்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. அஷ்வத்தாமாவிடம் உங்கள் வாழ்த்தை காட்டினேன். மிகவும் சந்தோசப்பட்டார். உங்களுக்கு தன்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்கும் படி சொன்னார். மிக்க நன்றி சகோதரரே!! :)

      Delete
  2. இ.பி.நா.ந.வா அச்சு ! Be Blessed By Divine in All Dimensions !

    ReplyDelete
    Replies
    1. அஷ்வத்தாமாவுக்கு உங்களை நினைவுபடுத்தினேன் ... அவருக்கு நீங்கள் சொன்ன புலிக் கதையையும் சொன்னேன். :) உங்களுக்கு தன்னுடைய அன்பான நன்றியை சொல்லச் சொன்னார் . மிக்க நன்றி ரிஷி ஐயா!! :)

      Delete
  3. என்னுயிர் தமிழ் போல நீ வாழ்வாய் பல்லாண்டுகள்....வாழ்க வாழ்க... சுகமுடனும் நலமுடனும் நீடூழி வாழ வாழ்த்துக்கள் செல்லம்...

    ReplyDelete
  4. எல்லா நலன்களும் பெற்று இனிதே வாழ்க குட்டி

    ReplyDelete